உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணாரேந்தல் கருப்பணசுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா

கண்ணாரேந்தல் கருப்பணசுவாமி கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே, கண்ணாரேந்தல் கருப்பணசாமி கோவில், நடைபெற்ற சித்ரா பவுர்ணமி விழாவில், கோயில் முன்பு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள், கோயிலில் இருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள முள்ளிமுனை கடலில் புனித நீராடி, அங்கிருந்து காவடி, தீச்சட்டி, நேர்த்திக்கடன் அருவாள் ஆகியவைகளுடன் ஊர்வலமாக வந்த பக்தர்கள், கோயில் முன்பு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். அதைத் தொடர்ந்து, மூலவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !