மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் கோவிலில் ஆடி கிருத்திகை விழா கோலாகலம்
பரமக்குடி; ஆடி கிருத்திகை விழாவையொட்டி பரமக்குடியில் இருந்து மேலக்கொடுமலூர் முருகன் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.
பரமக்குடி அருகே 12 கி.மீ., தொலைவில் மேலக்கொடுமலூர் குமரக்கடவுள் என்ற சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. இங்கு தீர்த்தம், ஸ்தல விருட்சம் உடைமரம் ஆகும். ஒவ்வொரு கிருத்திகை விழாவிலும் பக்தர்கள் இரவு முழுவதும் இருந்து அபிஷேகம் நடத்துவது வழக்கம். இதன்படி ஆடி கிருத்திகை விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு மேலக்கொடுமலூர் பாதயாத்திரை குழு சார்பில், 40 வது ஆண்டு பால்குடம், பறவை காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். அங்கு இரவு 10:00 மணி தொடங்கி அபிஷேக ஆராதனைகள் நடந்தது. திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்து நேரடியாக மேலக்கொடுமலூர் வந்து காட்சி அளித்த இடமாகும். *பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயிலில் நேற்று இரவு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசனம் செய்தனர். இதே போல் பரமக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடந்தது.