அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு அபிஷேகம்
ADDED :599 days ago
கோவை; அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் தேய்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் ஸ்ரீதேவி பூதேவி தாயார்கள் பச்சை நிற வஸ்திரத்திலும் மூலவர் கரி வரதராஜ பெருமாள் புஷ்ப அலங்காரத்துடனும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.