உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நகரி கரகண்டேஸ்வரர் கோவிலில் கந்தர் சஷ்டி விழா!

நகரி கரகண்டேஸ்வரர் கோவிலில் கந்தர் சஷ்டி விழா!

நகரி: நகரி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தர் சஷ்டி விழா சிறப்பு பூஜை களுடன் துவங்கியது. நகரி, புதுப்பேட்டை, ஏகாம்பரகுப்பம், கே.வி.பி.ஆர்.பேட்டை, சிந்தலப்பட்டடை, சத்தரவாடா, புத்தூர் டவுன் ஆகிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், கந்தர் சஷ்டி உற்சவ விழா சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.நகரி கரகண்டேஸ்வரர் கோவிலில், வரும், 19ம் தேதி வரை தினமும் மூலவருக்கு காலையில் அபிஷேகம் நடைபெறும். மாலையில் உற்சவர் வீதியுலா நடைபெறும். வரும், 18ம் தேதி மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், மறுநாள் வள்ளி, தெய்வானை சமேதரான சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !