உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாழடைந்த அகத்தீஸ்வரர் கோவில் 30 ஆண்டாக சீரமைக்காத அவலம்

பாழடைந்த அகத்தீஸ்வரர் கோவில் 30 ஆண்டாக சீரமைக்காத அவலம்

உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம் காட்டாங்குளம் கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான பழமை வாய்ந்த அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது.இத்தலத்தில் அகத்தியர், ஈசனை வணங்கி பேறு பெற்றதால், அகத்தீஸ்வரர் என பெயர் பெற்றதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் இருந்த கொடிமரம், பலிபீடம் மற்றும் உள்புற சுவாமிகளின் சன்னிதிகளும், பின்புறத்தில் இருந்த தெய்வங்களுக்கான தனி சன்னிதிகளும், 30 ஆண்டுகளுக்கு முன் இடிந்து சேதமானது. நந்திக்கான சன்னிதியை தவிர, கோவில் வளாகத்தில் இருந்த வெளி மண்டபமும் இடிந்து, கலைநயமிக்க தூண்கள் மட்டுமே தற்போது காட்சியளிக்கிறது. தினமும் அப்பகுதி வாசிகள் சார்பில், தற்போது ஒரு கால பூஜை இக்கோவிலில் நடைபெற்று வருகிறது. எனவே, பிரசித்தி பெற்ற பழமையான இக்கோவிலை சீரமைத்து, பக்தர்களின் வழிபாட்டிற்கு மீண்டும் கொண்டுவர, ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !