மேலும் செய்திகள்
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
396 days ago
வடமதுரை கோயில்களில் வருடாபிஷேக விழா
396 days ago
பிரதோஷம் : சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
396 days ago
புதுச்சேரி; மணக்குள விநாயகர் கோவிலில், இ–சேவை முறையில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் நவீன முறை துவங்கப்பட்டுள்ளது.புதுச்சேரிக்கு உலகம் முழுவதிலும் இருந்து வந்து குவியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு வரும் பயணிகளின் விருப்பப்பட்டியலில், மணக்குள விநாயகர் கோவில் பிரதானமாக இருக்கிறது. இந்த கோவிலில், சுவாமிக்கு காணிக்கை செலுத்த, இ–சேவை முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து, பலரும் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் புதுச்சேரி ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி மூலம், இ–சேவை உண்டியல், நேற்று மணக்குள விநாயகர் கோவிலில் வைக்கப்பட்டது. இதன் துவக்க விழா, நேற்று காலை நடந்தது.இந்த உண்டியலை, கோவில் சிறப்பு அதிகாரி பழனியப்பன் துவக்கி வைத்தார். இதில் பக்தர்கள் மொபைல் மூலம் காணிக்கை அளிக்கலாம். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டது. இந்த விழாவில், ஐ.சி.ஐ.சி.ஐ., கிளை மேலாளர் சிவகுமார், வட்டார மேலாளர் சக்தி, விக்னேஷ் கோவில் தலைமை குருக்கள் கணேஷ் நாகராஜ், சீனு மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அந்த கோவிலில், 64ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா வரும், 9ம், தேதி துவங்குகிறது. இந்த உற்வசம் மொத்தம், 24 நாட்களுக்கு நடக்கிறது. இதற்கான பந்தக்கால் சிறப்பு பூஜை, நேற்று நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
396 days ago
396 days ago
396 days ago