திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆடிப்பூர பிரம்மோற்சவம்; தீர்த்தவாரியுடன் நிறைவு
ADDED :548 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவகங்கை தீர்த்த குளத்தில், சூலம் ரூபத்தில் பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வந்தது. விழாவில் பிரம்மோற்சவம் நிறைவு விழாவை யொட்டி, கோவில் சிவகங்கை தீர்த்த குளத்தில், சூலம் ரூபத்தில் பராசக்தி அம்மனுக்கு தீர்த்தவாரி நடந்தது. தீர்த்த குளக்கரையில் சிறப்பு அலங்காரத்தில் பராசக்தி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சுவாமிக்கு காணிக்கையாக செலுத்திய பட்டுப் புடவைகள் மற்றும் பட்டு வேட்டிகள் தங்க கொடிமரம் அருகே ஏலம் விடப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.