உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துாத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

துாத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் புஷ்பாஞ்சலி

துாத்துக்குடி; துாத்துக்குடி, மேலூர், தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் 29 ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி பூஜை விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 7:00 மணிக்கு அம்பாளுக்கு புஷ்ப பாவாடை அலங்காரம் செய்யப்பட்டு தீபாரணை நடந்தது. பகல் 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு தெப்பக்குளம் மாரியம்மன் பல்வேறு பூக்களால் அலங்கரிக்கப்பட்டு நவ கன்னிகா பூஜை மற்றும் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ராதா, அறங்காவலர் குழு தலைவர் செல்வ சித்ரா அறிவழகன், அறங்காவலர்கள் மகாராஜன், பாலகுருசாமி, கோவில் பட்டர்கள்சிவா மற்றும் குரு ஆகியோர் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !