அரங்கநாதருக்கு திருக்கல்யாணம்; சீர் கொண்டு வந்து பக்தர்கள் பரவச தரிசனம்
ADDED :430 days ago
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த அனுப்பர்பாளையத்தில் ஸ்ரீ தேவி, பூதேவி, சமேத ஸ்ரீ அரங்கநாத பெருமாள் திருக்கோவில் உள்ளது. திருக்கோவிலில், ஆடி பூர திருக்கல்யாண வைபவ விழா நேற்று காலை நடைபெற்றது. விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு மேல் உற்சவ பெருமாளுக்கு மஹா திருமஞ்சனம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பக்தர்கள் சீர் தட்டம் கொண்டு வந்தனர். மதியம் 11:00 மணிக்கு மேல், 11:45 மணிக்குள் திருக்கல்யாண வைபவம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைப்பெற்றது. நிகழ்ச்சியில், நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருகல்யாண வைபவத்தை கண்டு கழித்தனர். திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் திருகல்யாண விருந்து வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.