/
கோயில்கள் செய்திகள் / தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பப்புவா நியூ கினியாவில் இருந்து கப்பலில் வந்த கொடி மரம்
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு பப்புவா நியூ கினியாவில் இருந்து கப்பலில் வந்த கொடி மரம்
ADDED :424 days ago
திருநெல்வேலி; தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார், இத்தலத்து இறைவனை வணங்கினால் வடகாசியில் உள்ள இறைவனை வணங்கிய புண்ணியம் கிடைக்கும். கோயில் மூலவரான காசி விஸ்வநாதரை ஏறத்தாழ ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்தே பார்க்கலாம். அந்த அளவிற்கு சுவாமி சன்னதி அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இத்தலத்தில் கும்பாபிஷேக பணிகள் நடந்து வருகிறது. இக்கோவிலில் புதிதாக நடப்பட உள்ள கொடி மரத்துக்கு பப்புவா நியூகினியா நாட்டிலிருந்து இரண்டு வேங்கை மரங்கள் கப்பலில் வந்தன. கோயிலில் ஒப்படைக்கப்பட்ட கொடி மரங்களை பக்தர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர். சுவாமி சன்னதிக்கு 45 அடி நீள கொடி மரமும் அம்மன் சன்னதிக்கு 38 அடி நீள கொடி மரமும் நடப்பட உள்ளது.