கூடலுார் சுந்தரவேலவர் கோயிலில் ஆடி வெள்ளி விளக்கு பூஜை
ADDED :788 days ago
கூடலுார்; கூடலுார் சுந்தரவேலவர் கோயிலில் ஆடி வெள்ளி நான்காவது வாரத்தை முன்னிட்டு மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இயற்கை பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்றவும், அனைவரும் இன்புற்று வாழவும் வேண்டி விளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சிறப்பு பூஜை, ஆராதனை நடந்தது. அன்னதானம் மற்றும் கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.