நெய்யில் தெரிந்த அம்மன் முகம்; திருவண்ணாமலையில் பக்தர்கள் பரவசம்
ADDED :421 days ago
திருவண்ணாமலை; திருவண்ணாமலை; இரட்டை காளியம்மன் கோவில் ஆடி வெள்ளி வழிபாட்டில் நெய்யில் பிரதிபலித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, கிரிவலப் பாதை சின்னக் கடை வீதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இரட்டை காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில், நேற்று ஆடி நான்காம் வெள்ளி கிழமையை முன்னிட்டு நெய் குளம் சிறப்பு அலங்காரத்தில் ரெட்டை காளியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கீழே குளம் போல் ஊற்றி வைக்கப்பட்டுள்ள நெய்யில் பிரதிபலித்த அம்மனை பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.