திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED :783 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடி நான்காம் வெள்ளி கிழமையையொட்டி திருகல்யாண மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடந்தது. பூஜையில் பராசக்தியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூஜை செய்து வழிப்பட்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி, அம்மனை தரிசனம் செய்தனர்.