ஆனையூர் ஐராவதேஷ்வரர் கோயிலில் ஆய்வு
ADDED :421 days ago
உசிலம்பட்டி; இந்திய தொல்லியல் துறையின் கோயில் ஆய்வுத்திட்டம் சார்பில் தமிழகத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க கோயில்களை ஆவணப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. நேற்று தென்மண்டல தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத்ராமகிருஷ்ணன் தலைமையில், உதவி தொல்லியல் ஆய்வாளர் பிரசன்னா, புகைப்படக்கலைஞர் சுகுணா, ஆய்வு மாணவர்கள் தீபக், ராமசாமி உள்ளிட்ட குழுவினர் உசிலம்பட்டி தாலுகாவில் ஆனையூர் கிராமத்தில் உள்ள 1000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஐராவதேஷ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் இருந்து பாண்டியர்கள், சோழர்கள், நாயக்கர்கள் காலத்திய கல்வெட்டுக்களை பார்வையிட்டனர். தொடர்ந்து மேலத்திருமாணிக்கம், சோழவந்தான் தென்கரை, குருவித்துறை பகுதியில் உள்ள கோயில்களையும் ஆவணப்படுத்தும் பணி விரைவில் நடைபெறும் என தெரிவித்தனர்.