ஆடி சஷ்டி; பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :784 days ago
கோவை; ஆடி மாதத்தில் வரும் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் விபூதி காப்பு அலங்காரத்துடன் புஷ்ப அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.