உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி காட் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்லக் கட்டுப்பாடுகள்

திருப்பதி காட் சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்லக் கட்டுப்பாடுகள்

திருமலை; திருப்பதி இரு காட் சாலைகளிலும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என TTD முடிவு செய்துள்ளது. இந்த கட்டுப்பாடு ஆகஸ்ட் 12 திங்கள் முதல் உடனடியாக அமலுக்கு வருகிறது. பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


டிடிடி வனத்துறையின் துணைப் பாதுகாவலரின் கூற்றுப்படி, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இதனால், முதல் காட் ரோடு வழியாக வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடக்கின்றன. பக்தர்கள் மற்றும் வன விலங்குகளின் நலன்களுக்காக மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க, 30.09.2024 வரை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்களை முதல் மற்றும் இரண்டாவது காட் சாலைகளில் இயக்க TTD முடிவு செய்துள்ளது. பக்தர்கள் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு TTDக்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !