உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்; சவான் மாத கடைசி திங்கள்.. புனித நீராடி சிவ தரிசனம் செய்த பக்தர்கள்

சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்; சவான் மாத கடைசி திங்கள்.. புனித நீராடி சிவ தரிசனம் செய்த பக்தர்கள்

சாவன் மாத திங்கட்கிழமை.. இன்று சிவனை இப்படி வழிபட்டால் விருப்பங்கள் நிறைவேறும். ஜூலை 22ம் தேதி சாவன் மாதம் தொடங்கியது. இது சிவனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் சிவனை வழிபடுவதால், மகிழ்ச்சி, அன்பு, தூய்மை, நிம்மதி, நிதி ஆதாயம் கிடைக்கும். இந்த ஆண்டு சிராவண மாதம் ஜூலை 22ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 19ம் தேதி முடிவடைகிறது. இந்த மாதத்தில் சிவனை வழிபட்டு விரதம் இருந்தால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகமாம். சவான் மாதத்தின் கடைசி திங்கள் கிழமையான இன்று, உத்தரப்பிரதேசம் மஹாகாலேஷ்வர் கோயிலில் சிவனுக்கு  பஸ்ம ஆரத்தி செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். கோரக்பூரில் உள்ள பாபா முஞ்சேஷ்வர் நாத் மந்திரில் பக்தர்கள் குவிந்தனர். மேலும் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !