/
கோயில்கள் செய்திகள் / வளர்பிறை அஷ்டமி; 39 அடி உயர தென்னக காசி பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
வளர்பிறை அஷ்டமி; 39 அடி உயர தென்னக காசி பைரவருக்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
ADDED :476 days ago
ஈரோடு; தென்னக காசி பைரவர் திருக்கோவில் என்று அழைக்கப்படும் ஆசியாவிலேயே மிக உயரமான 39 அடி உயர பைரவர் திருக்கோவில், ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை இராட்டைசுற்றிபாளையத்தில் அமைந்துள்ளது. அடுத்த இக்கோவிலின் நுழைவாயிலில் 39 அடி உயர பிரம்மாண்ட காலபைரவர் சிலை அமைந்துள்ளது. மேலும் மூலவராக ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அருள்பாலிக்கின்றார். பைரவருக்கென்றே அமைந்துள்ள இந்த பிரம்மாண்ட ஆலயத்தில் 64 பைரவ அவதாரங்களையும் தரிசனம் செய்வது சிறப்பு. மேலும் இந்த ஆலயத்தில் ஆண் பெண் இருபாலரும் கருவறைக்குள்ளேயே சென்று தரிசனம் செய்யலாம் என்பது வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பு. இன்று அஷ்டமியை முன்னிட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டனர். இங்கு பக்தர்கள் தங்கள் கைகலாலேயே பைரவருக்கு பால் அபிஷேகம் செய்வது சிறப்பு.