உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன விழா

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன விழா

திருப்புல்லாணி; ஆடி சுவாதியை முன்னிட்டு, திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் உள்ள பெரிய கருடாழ்வாருக்கு விசேஷத் திருமஞ்சனம் நடந்தது. திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 44 ஆவதாக உள்ளது. இங்கு ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு 32 அடி உயரமுள்ள பெரிய மதில் சுவற்றின் வடகிழக்கு பகுதியில் வீற்றிருக்கும் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம் அபிேஷக பூஜை நடந்தது. அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. கோயில் வெளிப்பிரகாரத்தில் நின்று பக்தர்கள் கருட மந்திரங்கள் முழங்க சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !