சோற்றுத்துறை நாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை விழா
ADDED :533 days ago
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறை நாதர் கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார் குரு பூஜை விழா நடந்தது. கிணத்துக்கடவு, சிங்கராம்பாளையம் பிரிவு, எஸ்.எம்.பி., நகரில் உள்ள சோற்றுத்துறை நாதர் கோவிலில் நேற்று ஆடி மாதம், சுவாதி நட்சத்திரத்தை யொட்டி, சுந்தர மூர்த்தி நாயனார் குரு பூஜை விழா நடந்தது. இதில், சுந்தர மூர்த்தி நாயனாருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் மற்றும் தீபாராதனை நிகழ்சிகள் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.