மேலும் செய்திகள்
கோரிப்பாளையம் தர்ஹா சந்தனக்கூடு
392 days ago
ஸ்ரீ கருப்பராயசுவாமி கோவில் கும்பாபிஷேக விழா
392 days ago
ஸ்ரீ பட்டத்து விநாயகர் கோயிலில் வருடாபிஷேகம்
392 days ago
மேலுார்; மேலூர் நாகம்மாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் 30 நாட்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்கட்டி தெப்பக்குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு சென்றனர். அங்கு மின் மோட்டார் மூலம் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 4 அடி முதல் 20 அடி நீளமுள்ள அலகு குத்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். நாளை (ஆக. 14) முளைப்பாரி ஊர்வலமும், அதனை தொடர்ந்து புஷ்பரதத்தில் அம்மன் எழுந்தருளி நகரின் மக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஆக. 15 முளைப்பாரி கரைக்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டும் நடைபெறும். இதில் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வர்.
392 days ago
392 days ago
392 days ago