உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நடுவனூர் கருப்புசாமி கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா

நடுவனூர் கருப்புசாமி கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத திருவிழா

நத்தம்; நத்தம் அருகே நடுவனூர் கருப்புசாமி கோவில் ஆடி படையல் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட வினோத நிகழ்ச்சி நடந்தது.


நத்தம் அருகே நடுவனூரில் உள்ளது கருப்பசாமி கோயில். இக்கோவிலில் வருடந்தோறும் ஆடி படையல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வது வழக்கம்.அதன்படி இந்தாண்டுக்கான ஆடி படையல் திருவிழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகங்கள் நடந்தது.தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 25-க்கும் மேற்பட்ட கிடாய்கள் வெட்டப்பட்டு சுவாமிக்கு படையல் போடபட்டது. பின்னர் 30 சிப்பம் அரிசியில் சாதம் தயார் செய்யப்பட்டு கறி குழம்புடன் அன்னதானம் நடந்தது. இதில் சுற்றுவட்டார கிராம பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நடுவனூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !