கமுதி துர்க்கை அம்மன் கோயிலில் விளக்கு பூஜை
ADDED :487 days ago
கமுதி; கமுதி அருகே அபிராமம் சாந்த கணபதி கோயில் வளாகத்தில் உள்ள சுயம்புலிங்க துர்க்கை அம்மனுக்கு 34ம் ஆண்டு ஆடி கொடை விழா கடந்த ஆக.10ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. தினந்தோறும் துர்க்கை அம்மன் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான 508 விளக்குபூஜை நடந்தது.அம்மனுக்கு பால், மஞ்சள்,சந்தனம் உட்பட 21 வகையான அபிஷேகம்,சிறப்பு பூஜைகள் நடந்தது.பின்பு அபிராமம் முக்கிய வீதிகளில் சிம்ம வாகனத்தில் துர்க்கை அம்மன் திருவீதி உலா நடந்தது. விழாவை முன்னிட்டு கமுதியை சுற்றியுள்ள கிராமமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.