மேலும் செய்திகள்
அரங்கநாதர் கோவில் தேருக்கு ‘ஷெட்’ இல்லை
390 days ago
ஆரோக்கிய அன்னை தேர்பவனி
390 days ago
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு சப்பர வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சப்பரத்தை இழுத்து வந்தனர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா இன்று நடைபெற உள்ளது.சிவகங்கை சமஸ்தானம்,தேவஸ்தானம் நிர்வாகத்திற்குட்பட்ட ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் ஆடித்தபசு திருவிழா வருடம் தோறும் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது ஆனந்தவல்லி அம்மன் சிம்மம்,அன்னம்,கமலம்,குதிரை, யானை, பூப்பல்லக்கு,கிளி,விருஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி 4 ரத வீதிகளின் வழியே வீதியுலா நடைபெறும். இந்தாண்டிற்கான ஆடித்தபசு திருவிழா கடந்த 7 ம்தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினம் தோறும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று வருகிறது.நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான சப்பர வீதியுலாவிற்காக கோயில் முன்பாக அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த சப்பரத்தில் மாலை 5:00 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரங்களுடன் இதனைத் தொடர்ந்து சன்னதி புதுக்குளம், மானாமதுரை கஸ்பா கிராமத்தினர் மற்றும் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் தேங்காய்களை சப்பரத்திற்கு முன்பாக சிதறுகாய் உடைத்து விட்டு சப்பரத்தை 4 ரத வீதிகளின் வழியே இழுத்து வந்தனர்.சப்பரம் நிலையை அடைந்தவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்றது.இன்று கோயில் முன்பாக அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படியில் ஆடித்தபசு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகின்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் சீனிவாசன், ஸ்தானிகர் சோமசுந்தர பட்டர் ஆகியோர் செய்து வருகின்றனர்.
390 days ago
390 days ago