உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சிவன் கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி; ராகு கேது நிவர்த்தி பூஜை

காளஹஸ்தி சிவன் கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி; ராகு கேது நிவர்த்தி பூஜை

காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் பிரசித்தி பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பங்கஜ் மித்தல் சாமி தரிசனம் செய்ய வந்தவர்களை கோவில் நிர்வாகிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் முன்னதாக கோயிலில் நடக்கும்  சிறப்பு ராகு கேது சர்ப்ப தோஷ நிவர்த்தி பூஜையில் ஈடுபட்டதை தொடர்ந்து  ஞானப்பிரசுனாம்பிகா சமேத ஸ்ரீகாளஹஸ்திஸ்வரரை தரிசனம் செய்தவருக்கு கோயில் வளாகத்தில் உள்ள தஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் மேலும் கோயில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஆசிர்வாதமும் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தேவஸ்தான துணை செயல் அலுவலர் என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, உதவி ஆணையர் மல்லிகார்ஜுன பிரசாத், கோயில் கண்காணிப்பாளர்  நாகபூஷணம் யாதவ், கோயில் ஆய்வாளர் ஹரி யாதவ் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !