வரலட்சுமி விரதம்; முத்தங்கி அலங்காரத்தில் மகாலட்சுமி தாயார் அருள்பாலிப்பு
ADDED :780 days ago
கோவை; ராம் நகர் வி. என். தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதம் ஆகியவற்றை முன்னிட்டு உள்ள மூலவர் அம்மனுக்கும், மகாலட்சுமி தாயாருக்கும் அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் வெள்ளிக்காப்பு கவசத்தில் முத்துமாரி அம்மனும், முத்தங்கி அலங்காரத்தில் மகாலட்சுமி தாயாரும் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.