கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
ADDED :495 days ago
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் 108 குத்து விளக்கு பூஜை நடந்தது. ஆடி 5வது வெள்ளிக்கிழமையையொட்டி, நடந்த பூஜையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி, சந்தனக்காப்பு அலங்காரம் செய்து, குத்து விளக்கு பூஜை நடந்தது. தொடர்ந்து 108 சங்காபிஷேகம், நவதுர்கா ஹோமங்கள் நடத்தப்பட்டது. பூஜையில் திரளான பெண்கள் பங்கேற்றனர். பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் வேலு செய்திருந்தார்.