மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
ADDED :416 days ago
நெய்க்காரப்பட்டி; பழநி, பாப்பம்பட்டி, மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பழநி, பாப்பம்பட்டி, மகாலட்சுமி கோயில் ஆடி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.