திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை; பக்தர்கள் தரிசனம்
ADDED :752 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆவணி சனி பிரதோஷத்தை முன்னிட்டு, ராஜகோபுரம் அருகே உள்ள பெரிய நந்திய பகவானுக்கு பால் அபிஷேகம் நடந்தது.
அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று (17 ம்தேதி) சனி மகா பிரதோஷ பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதையொட்டி, கோவில் கொடிமரத்தின் அருகிலுள்ள, அதிகார நந்தி, சுவாமி கருவறை எதிரிலுள்ள நந்தியம்பெருமான், ஆயிரங்கால் மண்டபம் அருகிலுள்ள பெரிய நந்தி, உள்ளிட்டவற்றிற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில், பால், பன்னீர், மஞ்சள், இளநீர், எலுமிச்சை, சந்தனம், தேன் மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மன், மூன்றாம் பிரகாரம் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.