உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி ஞாயிறு: நாகர்கோவில் நாகராஜா கோவிலில் வழிபாட்டிற்கு குவிந்த பக்தர்கள்

ஆவணி ஞாயிறு: நாகர்கோவில் நாகராஜா கோவிலில் வழிபாட்டிற்கு குவிந்த பக்தர்கள்

நாகர்கோவில்: நாக தோஷங்களை நீக்கும் சிறந்த பரிகாரத் தலமாகக் கருதப்படும் நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆவணி முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்கின்றனர்.

நாகர்கோவில், நாகராஜா கோவிலில் ஆவணி ௩ம் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே கோவில் வாசலில் குவிந்தனர். காலை  கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. இதனால் கோவில் வாசலில் இருந்து முக்கிய நுழைவு வாயிலையும் தாண்டி பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். பக்தர்களின் வசதிக்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. கோவில் வளாகத்தில் நாகர்சிலைகளுக்கு மஞ்சள் தூவி, பால் ஊற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !