உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சனி பிரதோஷம்: தஞ்சாவூர் பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம்

சனி பிரதோஷம்: தஞ்சாவூர் பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம்

தஞ்சாவூர், உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷ வழிபாட்டிற்கு ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், ஆவணி மாதத்தின் முதல் நாளில் வரும் சனி பிரதோஷம் அன்று சிவ பெருமானை வழிபடுவதுடன், வாராஹி அம்மனையும் வழிபடுவது சிறப்பானது என்பது ஐதீகம். இதனால், பெரியகோவிலில் இன்று(17ம்) தேதி நடந்த பிரதோஷ விழாவில்,நந்தியம் பெருமானை வழிபட்டனர். அப்போது நந்தியம் பெருமானுக்கு பால்,மஞ்சள்,திரவியப்பொடி,தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !