/
கோயில்கள் செய்திகள் / ஆவணி அவிட்டம்; கோவையில் வேத மந்திரம் முழங்க நடைபெற்ற பூணூல் மாற்றும் நிகழ்வு
ஆவணி அவிட்டம்; கோவையில் வேத மந்திரம் முழங்க நடைபெற்ற பூணூல் மாற்றும் நிகழ்வு
ADDED :411 days ago
கோவை ; வருடம் தோறும் ஆவணி மாதத்தில் வரும் ஆவணி அவிட்டம் பூணூல் மாற்றும் நிகழ்வு நடைபெறும். அதன்படி, கோவை ராம் நகர் கோதண்டராமர் சுவாமி கோவில், ஐயப்பன் பூஜா சங்கம்,ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவில், ரேஸ்கோர்ஸ்சாரதாம்பாள் கோவில் மற்றும் கோவையில் உள்ள சதாசிவம் ஹால் அசோகா பிரேமா கல்யாண மண்டபம் ஆகியவற்றில் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு தங்களின் பழைய பூணூலை மாற்றி புதிதாக அணிந்து கொண்டனர். இதை வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க பூணூல் அணிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.