உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி அவிட்டம்; கோவை ராமர் கோவிலில் பூணூல் மாற்றும் உபாகர்மா

ஆவணி அவிட்டம்; கோவை ராமர் கோவிலில் பூணூல் மாற்றும் உபாகர்மா

கோவை; ஆவணி அவிட்டமான இன்று கோவையில் பூணூல் மாற்றும் வைபவம் நடந்தது. ஆவணி மாத பவுர்ணமி திதியும், அவிட்ட நட்சத்திரமும் இணைந்து வரும் நாள், ஆவணி அவிட்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், பழைய பூணூலை மாற்றி, புதிய பூணூல் அணிவர். முறையாக காயத்ரி மந்திரம் உபநயனம் செய்த பிராமணர்கள், இதை மேற்கொள்வர். இந்த சடங்கு முறைக்கு, ‘உபாகர்மா’ என்று பெயர். ராம் நகர் ராமர் கோவில் சார்பில், இன்று நடந்த பூணூல் மாற்றும் வைபவத்தில், சுந்தரம் வாத்தியார், நடராஜ் வாத்தியார் ஆகியோர், பூணூல் மாற்றும் வைபவத்தை நடத்தி வைத்தனர். ராமர் கோவில் சார்பில் நடந்த உபாகர்மாவில், 300க்கும் மேற்பட்டோர் பூணூல் மாற்றிக் கொண்டனர். 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, என, கோவில் அறங்காவலர் விசுவநாதன் தெரிவித்தார். காலை 7:00 மணி முதல் மூன்று பிரிவாக, உபாகர்மா நடந்தது. முன்னோருக்குத் தர்ப்பணம் தருதல், ஹோமங்கள் நடந்தன. அசோகா பிரேமா திருமண மண்டபம், சதாசிவம் ஹால், வாணிஸ்ரீ மகால் உட்பட, கோவையில் பல்வேறு இடங்களில் பூணூல் மாற்றும் வைபவம் நடந்தது. நாளை காயத்ரி ஜெபம் நடைபெறவுள்ளது. இதேபோல் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு உடுமலை பிராமண சேவா சமிதி சார்பில் பூணூல் மற்றும் நிகழ்ச்சி நடந்தது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !