திருப்போரூர் கெங்கை அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
ADDED :411 days ago
திருப்போரூர்; திருப்போரூர் அடுத்த தருமாபுரி கிராமத்தில், கெங்கை அம்மன் கோவில், ஆஞ்நேயர் கோவில், நவகிரக சன்னதிகள் உள்ளன. இக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அனைத்து பணிகளும் முடிந்தன. இதன் கும்பாபிஷேக விழா, இன்று காலை நடந்தது. இதற்காக, கடந்த 17ம் தேதி காலை 8:00 மணிக்கு, முதல்கால பூஜை நடந்தது. நேற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் கால பூஜையும் நடந்தது. இன்று நான்காம் கால பூஜையும், 9:30 மணிக்கு கலச புறப்பாடும், 10:00 மணிக்கு கோபுர கலசங்களுக்கு கும்பாபிஷேக நீரும் ஊற்றப்பட்டது. விழாவில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அதேபோல், திருப்போரூர் பிரணவ மலை கைலாசநாதர் கோவில், அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் கோவில், தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில், பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது.