மனதை மாற்றிய விவேகானந்தர்
எட்டாம் வகுப்பு படித்த ஒரு மாணவி 48வது ராங்க் வாங்கி யிருந்தாள். தலைமைஆசிரியை அவளது மார்க் கார்டில், இனிமேலாவது ஒழுங்காக படி என்று எழுதியிருந்தார். அதைப் பார்த்த பெற்றோர், இனியாவது ஒழுங்காகப் படி, எனத் திட்டினர். ஒருமுறை அவள் சென்னையில்உள்ள ராமகிருஷ்ண மடத்திற்குச் சென்றாள். அங்கிருந்த துறவியை சந்தித்தாள். அவளது படிப்பு பற்றிய பேச்சு வந்தது. தான் படிப்பில் பின் தங்கியிருக்கும் நிலையை எடுத்துச் சொன்னாள். அப்போது அந்தத்துறவி, விவேகானந்தரின் பொன்மொழிகள் அடங்கிய புத்தகத்தைக் கொடுத்தார். அவள் அந்த புத்தகத்தை திருப்பினாள். நான் எதையும் சாதிக்க வல்லவன்(ள்) என்று சொல். நீ உறுதியுடன் மட்டும் இருந்தால், பாம்பின் விஷம் கூட சக்தி யற்றதாகி விடும் என்ற வீர வசனத்தை வாசித்தாள். அது அவளது வாழ்வை மாற்றிப் போட்டது. 48 வது ராங்க் வாங்கிய அவள், 21வது ராங்கிற்கு தாவினாள். ஆம்...மகான்களின் வார்த்தைகள் சத்தியமானவை. அவற்றைத் திரும்பத் திரும்ப படியுங்கள். வாழ்க்கைப் பாதையில் வெற்றி நடை போடுங்கள்.