உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் அக்டோபர் 4ல் துவங்குகிறது

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் அக்டோபர் 4ல் துவங்குகிறது

திருமலை திருப்பதியில் ஆண்டு முழுவதும் 450 விழாக்கள் நடக்கின்றன அவற்றுள் சிகரம் வைத்தது போல நடப்பது பிரம்மோற்சவ விழாவாகும்.இறைவனே நடத்துவதாக  கருதப்படும் இந்த விழாவைக்காண பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளில்  இருந்தும் வருவர், அதிலும்  கருட வாகனத்தன்று  திருமலையே கொள்ளாத அளவிற்கு பல  லட்சம் பக்தர்கள் திரள்வர்.இந்த வருடம் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.04/10/2024 மாலை 5:45 மணியளவில் கொடியேற்றம்: இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகனத்தில்  சுவாமி உலா05/10/2024 காலை 8 மணி சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா: இரவு 7 மணிக்கு ஹம்ச வாகனம்06/10/2024 காலை 8 மணி சிம்ம வாகனம்: இரவு 7 மணி முத்துப்பந்தல் வாகனம்07/10/2024 காலை 8 மணி கற்பகவிருட்ச வாகனம்: இரவு 7 சர்வபூபாள வாகனம்08/10/2024 காலை 8 மணி மோகினி அவதாரம்: இரவு 6:30 மணி கருட வாகனம்09/10/2024 காலை 8 மணி ஹனுமந்த வாகனம்:மாலை 4 மணி தங்க ரதம்: இரவு 7 மணி யானை வாகனம்10/10/2024 காலை 8 மணி சூர்ய பிரபை வாகனம்: இரவு 7 மணி  சந்திர பிரபை வாகனம்11/10/2024 காலை 7 மணி தேரோட்டம்:இரவு 7 மணி குதிரை வாகனம்12/10/2024 காலை 6 மணி சக்ர ஸ்நானம்: இரவு 8:30 மணி கொடியிறக்கம்காலை  இரவு வேளைகளில் சுவாமி சன்னதி தெருவில் வாகனத்தில் வலம் வரும் போது பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.திருவிழா நாட்களில் மூலவர் தரிசனம் என்பது ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கே சிரமமாக இருக்கும், தர்மதரிசனத்திற்கு செல்பவர்கள் நீண்ட நேரம் வரை காத்திருக்கவேண்டியிருக்கும்.08 ஆம் தேதி நடைபெறும் மோகினி அவதாரத்தின் போது,மோகினி அவதாரத்தில் வரும் மலையப்பசுவாமியானவர் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த  மாலையை அணிந்து வருவார் என்பது விசேஷம், இதற்காக இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து மாலை சென்றடையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !