உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி பவுர்ணமி; திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் விளக்கேற்றி வழிபாடு

ஆவணி பவுர்ணமி; திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் விளக்கேற்றி வழிபாடு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி பவுர்ணமியை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆவணி பவுர்ணமி விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி சுவாமியை தரிசனம் செய்தனர். மாலை முதலே பக்தர்கள் குவிந்தனர். பெண்கள் கடற்கரை மணலில் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !