காஞ்சி காமகோடி மடத்தில் ஸ்ரீ ஜெயேந்திரர் ஜன்ம நட்சத்திர விழா
ADDED :409 days ago
மதுரை; மதுரை பெசன்ட் ரோடு காஞ்சி காமகோடி மடத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாதாந்திர திரு நட்சத்திர விழா நடந்தது. விக்ரகத்திற்கு அபிேஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணிக்கு மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பிரார்த்தனை என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். ஏற்பாடுகளை மடத்தின் தலைவர் டாக்டர் ராமசுப்பிரமணியன், செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் வெங்கட்ரமணி, நிர்வாகிகள் ஸ்ரீகுமார், ஸ்ரீராம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.