வேதபுரீஸ்வரர் கோவிலில் யஜூர் வேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி
ADDED :411 days ago
புதுச்சேரி; வேதபுரீஸ்வரர் கோவிலில் யஜூர் வேத ஆவணி அவிட்டம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவிலில் கீதாராம் சாஸ்திரிகள் தலைமையில் நேற்று காலை 10:00 மணிக்கு, யஜூர் வேத ஆவணி அவிட்டம் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி (உபாகர்மா) நடந்தது. முன்னதாக மகா சங்கல்பம், கணபதி பூஜை, புன்னியாவாச்சனம், காண்டரிஷி தர்பணம் ஹோமம் மற்றும் வேதாரம்பம் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.