அமெரிக்காவில் 90 அடி உயர ஹனுமான் சிலை திறப்பு; மூன்றாவது பெரிய சிலை!
ஹூஸ்டன்; டெக்சாஸ் மாநிலம் ஹூஸ்டனில் 90 அடி உயர அனுமன் சிலையின் பிரான் பிரதிஷ்டா விழா ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெற்றது. "ஸ்டேட்யூ ஆஃப் யூனியன்" என்று பெயரிடப்பட்ட இந்த சிலை இப்போது அமெரிக்காவின் மூன்றாவது உயரமான சிலை ஆகும். ராமயணத்தில் ஹனுமான் ஆற்றிய பங்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த சிலை அமைந்துள்ளது. டெக்சாஸில் உள்ள சுகர் லேண்டில் உள்ள ஸ்ரீ அஷ்டலக்ஷ்மி கோவிலில் அமைந்துள்ள இந்த பிரமாண்டமான சிலை உலகளாவிய ஆர்வத்தின் மைய புள்ளியாக மாறியுள்ளது. உலகெங்கிலும் உள்ள பக்தர்களின் கவனத்தை ஈர்க்கிறது. மற்றும் வெளிநாட்டு மண்ணில் இந்திய மரபுவழி கலாச்சார செழுமையை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டவர் ஸ்ரீ சின்னஜியர் சுவாமிகள். இந்த சிலை ஸ்ரீராமரும் சீதையும் ஒன்றுபட உதவிய ஹனுமனின் முக்கிய பங்கை நினைவூட்டுகிறது. விழாவில் பேசிய சின்னஜீயர் சுவாமிஜிகள் இது இந்திய பாரம்பரியத்தின் பெருமை மற்றும் ஆன்மீக ஒற்றுமையின் அடையாளமாக இந்த சிலை உள்ளது எனக்குறிபிட்டார்.