சிவன் கோயில்களில் அம்மன் சந்நிதி முன் ரிஷபவாகனம் உள்ளதன் காரணம் என்ன?
ADDED :4865 days ago
அம்பிகைக்குரிய வாகனம் சிங்கம். காளி, மாரி போன்ற தனிதேவதைகளுக்கு சிங்கம் இடம் பெற்றிருக்கும். சிவன் நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் போது பார்வதியுடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளினர். இதனை அனுகிரஹகோலம் என்று சிறப்பித்துக் கூறுவர். அந்த அடிப்படையில் சுவாமிக்குரிய ரிஷபத்தை அம்மனுக்கும் வைப்பதுண்டு.