75 நாட்கள் நடக்கும் தசரா விழா; பிரமாண்டமாய் கொண்டாடும் பழங்குடி மக்கள்!
ADDED :413 days ago
சட்டீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஜகதல்பூரில் தண்டேஸ்வரி மாயி கோயில் உள்ளது. இந்தப் பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் ஒன்று சேர்ந்து தசரா பண்டிகையை 75 நாட்கள் கொண்டாடுகின்றனர். இந்தப் பகுதியிலுள்ள பழங்குடியினர் தத்தமது பிரிவினர் வணங்கும் தெய்வச் சிலைகளைக் கொண்டு வருவர். பின்னர் அதை தண்டேஸ்வரி அம்மன் முன் வைத்து தசரா விழாவைத் துவங்குவர். இந்த விழா தொடர்ந்து 75 நாட்கள் நடைபெறும். இவ்வளவு நீண்ட தசரா கொண்டாட்டம் வேறு எங்குமே நடைபெறுவதில்லை. பஸ்தார் தசரா என்பது ஒரு விழா மட்டுமல்ல, அது மகத்தான கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது குறிபிடத்தக்கது. இந்த விழா அஸ்வின் மாத அமாவாசை தினத்தன்று தொடங்கி, விஜயதசமி நாளில் முடிவடைகிறது.