குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் கோலாகலம்
ADDED :413 days ago
கடலுார்: கடலூர், முதுநகர் செல்லாங்குப்பத்தில் குட்டியாண்டவர் கோவிலில் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள் பலித்தார்.
கடலுார், செல்லாங்குப்பத்தில் அமைந்துள்ள ஸ்ரீபூரணி புஷ்கலா சமேத குட்டியாண்டவர் கோவிலில் கும்பாபிஷேக 21ம் ஆண்டு பூர்த்தி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று 20ம் தேதி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.