சேவூர் உச்சிஷ்ட விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்
ADDED :413 days ago
அவிநாசி; சேவூர் அருகே ஸ்ரீ சங்கிலி கருப்பராயன், சங்கிலி முனீஸ்வரன் உள்ளிட்ட பரிவார மூர்த்தி கோவிலில் உச்சிஷ்ட விநாயகர் விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அவிநாசி வட்டம், சேவூர் அருகே பாலிக்காடு (கந்தப்ப கவுண்டன் புதூர்) பகுதியில் எழுந்தருளியுள்ள 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ சங்கிலி கருப்பராயன், சங்கிலி முனீஸ்வரன், மாகாளியம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்தி கோவில் உள்ளது. இதில் உச்சிஷ்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக விநாயகர் வழிபாட்டுடன்,முதல் கால யாக பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கால யாக வேள்வி பூஜை, கலச புறப்பாடு நடைபெற்று கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.