சதுர்முக முருகன் கோயிலில் குங்குமப்பூ கலந்து பால் அபிஷேகம்
ADDED :494 days ago
சின்னாளபட்டி; ஆவணி முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. உள்பிரகாரத்தில் சதுர்முக முருகனுக்கு, குங்குமப்பூ கலந்து பால் அபிஷேகம் நடந்தது. விசேஷ திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணியருக்கு, சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.