உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் ஆராதனை விழா

கோவை நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் ஆராதனை விழா

கோவை; கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி மடத்தின் கோவை கிளையானது கோவை புதூர் பகுதியில் அமைந்துள்ளது. இதன் 353 - வது ராகவேந்திர ஸ்வாமி ஆராதனை விழா கடந்த 19ம் தேதி  துவங்கியது. முதல் நாள் நிகழ்வாக காலை 7 மணி அளவில் ரிக் வேத உபா கர்மா நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 8:30 மணி அளவில் யஜுர்வேத உபாகர்மா நடைபெற்றது. அதன் பின்னர் காலை 9.30 மணி அளவில் சத்ய நாராயண பூஜை, அர்ச்சனை, தீபாரதனை ஆகியன நடைபெற்றது. மாலை 7 மணி அளவில் கோ- பூஜை. தானிய பூஜை, மந்திர புஷ்பம் ஆகியவை நடைபெற்றன. நேற்று 20ம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி வரை தினமும் காலை 6 மணிக்கு நிர்மால்ய தரிசனம் அதைத் தொடர்ந்து காலை 8 மணி அளவில் பஞ்சாமிர்த அபிஷேகம், உபன்யாசம், கனகாபிஷேகம், அலங்காரம், தீபாரதனை ஆகியவை நடைபெறும். இரவு 8 மணி அளவில் ரத உற்சவம், மந்திரபுஷ்பம் ஆகியன நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் மூலஸ்தானம் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் ராகவேந்திரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !