கோட்டை முனியப்பன் கோவில் பொங்கல் விழா
அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, பி.என் ரோடு, பிச்சம் பாளையம் புதூர் திருநல்லாற்றில் ஸ்ரீ கோட்டை முனியப்பன் மற்றும் மாகாளியம்மன், மல்லியம்மன், மாயவர் வேட்டைகாரசுவாமி, கருப்பராயன், கன்னிமார், தன்னாசியப்பன் ஆகிய கோவில் உள்ளது. கோவிலில் 24 ம் ஆண்டு பொங்கல் திருவிழா கடந்த 19 ம் தேதி முதல் தொடங்கி, நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, கடந்த 19 ம் தேதி மாலை கோபி புளியம் பட்டி ஆற்றில் இருந்து, தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இரவு 9:00 மணிக்கு கேத்தம்பாளையம் பழைய வெற்றி விநாயகர் திருக்கோவிலில் இருந்து, படைக்கலம் கும்பம் கொண்டு வரப்பட்டது. இன்று 21ம் தேதி காலை கேத்தம்பாளையம் வெற்றி விநாயகர் கோவிலில் இருந்து, பக்தர்கள் மாவிளக்கு மற்றும் பொங்கல் பானை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். தொடர்ந்து, கோவிலில் பொங்கல் வைத்து சுவாமியை தர்சித்தனர். மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பக்தர்கள் பூவோடு ஊர்வலமாக எடுத்து வந்தனர். நாளை 22 ம் தேதி மதியம் மஞ்சள் நீராட்டு விழாவுக்கு விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் செய்து இருந்தனர்.