உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

யோக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

வடமதுரை; வடமதுரையில் ஏ.வி.பட்டி ரோடு சங்கர்களம் யோக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று மாலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக பூஜைகள் நடந்தன. இன்று காலை கடங்கள் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. வடமதுரை மங்கம்மாள்கேணி பக்த ஆஞ்சநேயர் கோயில் தலைமை அர்ச்சகர் நாராயணன் தலைமையிலான குழுவினர் புனித நீருற்ற கும்பாஷேகம் நடந்தது. பேரூராட்சி கவுன்சிலர்கள் கணேசன், மருதாம்பாள் செந்தில் ஆண்டவர், தே.மு.தி.க., நகர செயலாளர் பாலமுருகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பார்த்தசாரதி உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !