உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்

அகோபில வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்

பாலசமுத்திரம்; பழநி, பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆவணி மாத பிரம்மோற்ஸவ திருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலில் ஆக.15., சிறப்பு பூஜைகளுடன் ஆவணி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று (ஆக.,21ல்) மாலை, திருக்கல்யாணம் ஸ்ரீதேவி,பூதேவி, அகோபில வரதராஜ பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். இரவு பவளக்கால் சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இன்று (ஆக. 22ல்) பாரிவேட்டை, நாளை (ஆக.,23ல்) தேரோட்டம் நடைபெறும். ஆக., 24ல் கொடியிறக்குதல், ஆக. 25.,ல் விடையாற்றி உற்ஸவம் நடைபெறும். தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !