சாலையூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :493 days ago
அன்னூர்; சாலையூர், செல்வ விநாயகர் கோவில், கும்பாபிஷேகம் இன்று நடந்தது. சாலையூரில் பல நூறு ஆண்டுகள் பழமையான செல்வ விநாயகர் மற்றும் அரச மரத்து விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பல லட்சம் ரூபாய் செலவில், பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலையில் திருப்பதி, ஹரித்துவார், காசி உள்ளிட்ட 10 புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு, கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இரவு எண் வகை மருந்து சாத்தப்பட்டது. இன்று காலை 8:00 மணிக்கு விமான கோபுரம் மற்றும் செல்வ விநாயகருக்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, விநாயகருக்கு மகா அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.